உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் குழுக்களுக்கு கடனுதவி; சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ்

மகளிர் குழுக்களுக்கு கடனுதவி; சிறந்த பணியாளர்களுக்கு சான்றிதழ்

ஊட்டி; அகில உலக கூட்டுறவு தினத்தை ஒட்டி மகளிர் குழுக்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, அகில உலக கூட்டுறவு தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, நீலகிரி கூட்டுறவு சங்கம் சார்பில், 'சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்' என்ற கருப்பொருளோடு நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி, பி.மணிஹட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின், 5 மகளிர் சுய உதவி குழு, குருத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிறுவனங்களில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல்பட்ட முதல்வர் மருந்தக பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டன.இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சு, கவிதை போட்டி ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை