மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
4 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
4 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
4 hour(s) ago
ஊட்டி;ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்,ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து மெகா ரங்கோலி போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நீலகிரியில், 2024 லோக்சபா தேர்தலுக்கான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு ஒட்டு போடுவது; ஓட்டு பதிவானதா என்பதை உறுதி செய்யும் ரசீது வருகிறதா என்பதை சரிபார்க்கும் வகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அந்தந்த தாலுகா பகுதிகளில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய்துறை சார்பில், இயந்திரம் வைத்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.இம்மாதம், 25ம் தேதி முதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செயல் விளக்கம் காண்பிக்கப்பட உள்ளது.இந்நிலையில், ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் லோக்சபா தேர்தலை ஒட்டி ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து ரங்கோலி போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதில், 'என் ஓட்டு; என் உரிமை; என் ஓட்டு விற்பனைக்கு அல்ல; நுாறு சதவீத ஓட்டு பதிவு முக்கியம்,' என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.ரங்கோலியை கலெக்டர் அருணா பார்வையிட்டார். மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago