நாட்டு நலப்பணி திட்ட துவக்கம்; கிராமத்தில் துாய்மை பணி
கோத்தகிரி; கோத்தகிரி மேல் கம்பட்டி கிராமத்தில், தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா நடந்தது. பள்ளி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, கிராமத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில், முழுமையாக துாய்மைப்படுத்தும் பணியில், நாட்டு நலப்படுத்திட்ட மாணவர்கள் ஈடுபட்டனர். மேலும், 'கிராமத்தில் உள்ள பொது இடங்களில், மரக்கன்றுகள் நடவு செய்துடன், பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்த்து கிராமத்தில் சுற்றுப்புற சூழலுக்கு முக்கியத்துவம் வழங்குவது,' என, முடிவெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கம்பட்டி கிராம தலைவர் நஞ்சன் உட்பட, பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். பள்ளி முதுகலை ஆசிரியர் செவனன் நன்றி கூறினார்.