உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புறக்கணிக்கப்பட்ட நீலகிரி பழங்குடியினர் :பண்டைய பழங்குடி கூட்டமைப்பு குற்றச்சாட்டு

புறக்கணிக்கப்பட்ட நீலகிரி பழங்குடியினர் :பண்டைய பழங்குடி கூட்டமைப்பு குற்றச்சாட்டு

பந்தலுார்;'பழங்குடியினர் நலத்துறை மூலம் துவக்கப்பட்டுள்ள ஆன்றோர் மன்றத்தில், நீலகிரி பழங்குடியினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்,' என, புகார் எழுந்துள்ளது.மாநில அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில், தலைவராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சரும், உறுப்பினராக அரசு செயலாளர், உறுப்பினர் செயலராக பழங்குடியினர் இயக்குனர் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவர்களை தவிர, சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., பொன்னுசாமி, ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., சித்ரா, அலுவல் சாரா உறுப்பினர்களாக, 11 மாவட்டங்களைச் சேர்ந்த 13 பழங்குடியின நிர்வாகிகள், பழங்குடியினர் அல்லாத அலுவல் சாரா உறுப்பினர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஆனால், 'பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த யாரையும் அதில், உறுப்பினராக சேர்க்கப்படவில்லை,' என்ற புகார் எழுந்துள்ளது.ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் கூறுகையில், ''நீலகிரியில் பணியர், காட்டு நாயக்கர், தோடர், கோத்தர், மற்றும் குரும்பர் சமுதாயத்தை சேர்ந்த 40 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறோம். அரசு மூலம் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தில், இங்குள்ள பழங்குடியினர் ஒருவர் கூட நியமிக்காதது, ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள நீலகிரி மாவட்ட பழங்குடியினர்கள், தங்கள் பிரச்னைகள் குறித்து எவ்வாறு நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என தெரியவில்லை. இது குறித்து மாநில அரசு மற்றும் டில்லியில் உள்ள பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை