| ADDED : மார் 12, 2024 01:14 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையத்தில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, தேசிய நெடுஞ்சாலையின் ஆண்டு நிதி திட்டத்தில், 99 கோடி ரூபாய் செலவில், 1.76 கி.மீ., தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதை நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக முறைப்படி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார்.இதையொட்டி, கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், மாநகர் மாவட்ட பொது செயலாளர் திருநாவுக்கரசு, பெரியநாயக்கன்பாளையம் நகரத் தலைவர் மகேந்திரராஜ், கூடலூர் நகர தலைவர் மகேந்திரன், ஓ.பி.சி., மாவட்ட தலைவர் பாலு, மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.