உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரூ.60 லட்சம் செலவில் எரிவாயு தகன மேடை

ரூ.60 லட்சம் செலவில் எரிவாயு தகன மேடை

கூடலூர் : 'கூடலூர் நகராட்சியில் 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டது. கூடலூர் நகர மன்ற கூட்டம் நடந்தது. தலைவர் அன்னபுவனேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய உதவி நீர் பொறியாளர் அருளரசன் பேசுகையில், ''மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. 5 இடங்களில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சமமான பகுதியில் 3 ஏக்கர் நிலம் நகராட்சி மூலம் வழங்க வேண்டும். இதுகுறித்த திட்ட அறிக்கை மன்ற கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்,''என்றார். இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அனூப்கான்: அரசின் உத்தரவுபடி, பார்த்தீனிய செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்; மலைப்பகுதி மேம்பாட்டுதிட்டம் மூலம் நகராட்சிக்கு ஆம்புலென்ஸ் வாங்க வேண்டும். பொறியாளர்: நடவடிக்கை எடுக்கப்படும். உஸ்மான்: மழை காலத்தில் நகராட்சி பகுதிகளில் 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர்குழாய் முறையாக பராமரிப்பின்றி உடைந்துள்ளதே இதற்கு காரணம். பாதுஷா: இப்பிரச்னைக்கு பிட்டர்கள்தான் காரணம்.பொறியாளர்: பிரச்னைக்கு தீர்வு காணப்படும். கூடலூர் நகராட்சியில் 60 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை காலம்புழா மயானத்தில் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை