உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காந்திகண்டியில் கூட்டம்

காந்திகண்டியில் கூட்டம்

மஞ்சூர் : காந்திகண்டி பகுதியில் புதியதாக கூட்டுறவு தொழிற்சாலை ஏற்படுத்த நன்கொடை பெற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.ஊட்டியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் உணவு துறை அமைச்சர் புத்திசந்திரன், 'காந்தி கண்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து, காந்திகண்டி சமுதாய கூடத்தில் புதிய தொழிற்சாலை ஏற்படுத்துவதற்கான செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை ஏற்படுத்துவது குறித்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பொதுகுழு கூட்டம் நடத்துவது; தொழிற்சாலை ஏற்படுத்த பொதுமக்களிடமிருந்து குறைந்தது 100 ரூபாய் நன்கொடையாக வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு தலைவர் விவேகானந்தன் தலை­மை வகித்தார். செயலாளர் ராமன், அர்ஜூணன், செட்டி வாத்தியார் முன்னிலை வகித்தனர்.தோணன், ராஜூ, பத்ரன், ரங்கசாமி, பெருமாள், ராமகிருஷ்ணன் உட்­­பட பலர் கலந்துகொண்டனர். பெள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ