உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தல்

உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தல்

கோத்தகிரி : அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்க தாலுகா மாநாடு கோத்தகிரியில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராஜகுமாரி, துணை தலைவராக ஜேக்கப் அமலநாதன், செயலராக பரமலிங்கம், துணை செயலராக செந்தில் குமார், பொருளாளராக ரஞ்சித்குமார் உட்பட கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் மாற்று திறனாளிகளுக்கு, 3,000 உதவித் தொகை வழங்க வேண்டும். கெரடாமட்டம் பிரியா காலனியில் வசிக்கும் மாற்று திறனாளிகளுக்கு பாதுகாக்கப்பட்ட நீர் வழங்குவதுடன், வீடில்லாத மாற்று திறனாளிகள் அனைவருக்கும், அரசு வீடுகள் கட்டித் தரவேண்டும்; வரும் 14ம் தேதி, ஊட்டியில் நடக்கும் மாற்று திறனாளிகள் மாவட்ட மாநாட்டிலும், மதுரையில் வரும் 27, 28ம் தேதிகளில் நடக்கும் மாநில மாநாட்டிலும், கோத்தகிரியில் இருந்து திரளாக பிரதிநிதிகள் பங்கேற்பது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராஜகுமாரி வரவேற்றார். சங்க மாவட்ட அமைப்பாளர் காந்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆல்துரை, வெங்கட்ரமணன், தர்மராஜ், அமிர்தலிங்கம், முருகேஷ் முன்னிலை வகித்தனர். பரமலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை