உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு

ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு

ஊட்டி : தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக நிர்வாக குழு உறுப்பினர் அர்ஜூணன் ஊட்டியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டார்.இங்குள்ள உயிரியல் நோய் கொல்லிகளை தயாரிக்கும் ஆய்வகம், உயிரியல் உரங்களின் ஆய்வகம், நறுமண எண்ணெய் உற்பத்தி கூடம், பசுமை ஆய்வு குடில்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் உட்ஹவுஸ் பண்ணையில், மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மூலிகை பூங்காவை பார்வையிட்டார். இப்பூங்காவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள 450க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்களின் பயன்களை கேட்டறிந்து, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளிடம் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் செல்வராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ