உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாலியல் தொல்லை போக்சோ வில் ஒருவர் கைது

பாலியல் தொல்லை போக்சோ வில் ஒருவர் கைது

கூடலுார்;கூடலுாரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் அருகே, தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, 3ம் தேதி முதல் காணவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் உத்தரவுபடி தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த, கூடலுாரை சேர்ந்த மோகன், 27, என்பவர், மாணவியிடம் பழகி, அவரைகடத்தி சென்றது தெரியவந்தது. தனிப்படை போலீசார், மோகனை பிடித்துமாணவியை மீட்டனர். தொடர்ந்து, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சுசிலா நேற்று மோகனை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி