மேலும் செய்திகள்
நல் நுாலகர் விருது
13-Dec-2025
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை
13-Dec-2025
அணைகள் நீர்மட்டம்
13-Dec-2025
பந்தலுார், : பந்தலுார் வனப்பகுதியில் அனுமதி இன்றி பொக்லைன் இயக்கி சாலை அமைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, சப்பந்தோடு மற்றும் குழி வயல் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மற்றும் வன விலங்குகள் வாழ்விடம் அமைந்துள்ளது. இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், இங்குள்ள வனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. அதனை மண் கொட்டி மறைந்து விடுகினறனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், சேரங்கோடு ஊராட்சி மூலம் எந்தவித அனுமதியும் இன்றி, வனப்பகுதியில் பொக்லைன் மூலம் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் நீரோடை மற்றும் வனவிலங்குகளுக்கு தேவையான தீவனங்கள் உள்ள நிலையில், அடர்த்தியான வனப் பகுதியில், நீரோடையை ஒட்டி குப்பைகள் கொண்டு சென்று கொட்டுவதற்கு ஏதுவாக, சாலை அமைக்கப்பட்டுள்ளது.மக்கள் கூறுகையில், 'மக்கள் எதிர்ப்பை மீறி நடக்கும் இந்த பணிகள் குறித்து விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட பொக்லைன் உரிமையாளர் மற்றும் இதற்கு காரணமான ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, குழிவயல் மற்றும் சப்பந்தோடு பகுதி மக்கள், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளோம். மேலும், வனத்துறையினரும் நேரடியாக ஆய்வு செய்து சாலை அமைத்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
13-Dec-2025
13-Dec-2025
13-Dec-2025