உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் மினி டைடல் பார்க் விரைவில் கொண்டுவர திட்டம்

குன்னுாரில் மினி டைடல் பார்க் விரைவில் கொண்டுவர திட்டம்

குன்னுார்;''நீலகிரியில், 2000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில், குன்னுார் பந்துமையில் மினி டைடல் பார்க் விரைவில் கொண்டு வரப்படும்,'' என, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.குன்னுாரில் நடந்த பட்டா வழங்கும் விழாவில், 50.73 லட்சம் ரூபாய் மதிப்பில் பயனாளிகளுக்கு பட்டா மற்றும் சைக்கிள் வழங்கப்பட்டது.அதில், அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''குன்னுார் கிராமப்புறங்களில் புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிகழ்ச்சியில், 365 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. தமிழக முதல்வரால் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக, சென்னையில் மாநாடு நடத்தி, 2 நாளில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி முதலீடு கொண்டு வரப்பட்டுள்ளது. நீலகிரியில், 2,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் பந்துமையில் மினி டைடல் பார்க் விரைவில் கொண்டு வரப்படும்,'' என்றார். குன்னுார் ஆர்.டி.ஓ., பூஷன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ