உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சொந்த நிலமிருந்தும் வாடகை கட்டடத்தில் தபால் நிலையம்

சொந்த நிலமிருந்தும் வாடகை கட்டடத்தில் தபால் நிலையம்

கூடலுார்;கூடலுாரில் சொந்த இடத்தில் கட்டடம் இன்றி தபால் நிலையம் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலூர் நகர தபால் நிலையம், கோழிக்கோடு சாலை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில், இயங்கி வருகிறது. வாடகையாக பல லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர்.தபால்துறைக்கு, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பழையகோர்ட் சாலை தீயணைப்பு நிலையம் அருகே சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்று சுவர் மட்டும் அமைத்துள்ளனர்.அங்கு, பல ஆண்டுகளாக, மக்கள் குப்பை கொட்டி வந்த நிலையில், தற்போது அங்கு, 'குப்பை கொட்ட வேண்டாம்' என அறிவிப்பு வைத்துள்ளனர். அங்கு கட்டடம் கட்ட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'நகரில் உள்ள இடத்தில், தபால் துறை நிதி ஒதுக்கியும், வங்கி கடன் பெற்றும் வணிக வளாகத்தின் கூடிய அலுவலகத்தை அமைத்து, கடைகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையை வங்கி கடனை திருப்பி செலுத்த முடியும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை