உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பா.ஜ., சார்பில் கோல போட்டி: வென்றவர்களுக்கு பரிசு

பா.ஜ., சார்பில் கோல போட்டி: வென்றவர்களுக்கு பரிசு

ஊட்டி;ஊட்டியில் பா.ஜ., சார்பில் கோல போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் நாள்தோறும் விடியலுக்கு முன், பெண்கள் தங்களது வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்து, தண்ணீர் தெளித்து கோலமிடுவர். வீடுகள், முற்றங்கள் மற்றும் தெருக்களின் நுழைவாயில்களில் கோலமிட்டு அலங்கரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, ஊட்டியில் பா.ஜ., சார்பில், கோலபோட்டி நடந்தது. பா.ஜ., நகர மண்டல பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, மாவட்ட பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர் நித்தின் சேகர் மண்டல துணைத்தலைவர் ஹரி கிருஷ்ணன், நிர்வாகிகள் ஜெயலட்சுமி மற்றும் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 80க்கும் மேற்பட்ட கோலங்களில் சிறந்த கோலம் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு வழங்கினர்.இதற்கான ஏற்பாடுகளை, கிளைத் தலைவர்கள், தீபா சுரேஷ்குமார், மகேஸ்வரி, பிரகாஷ், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சித்ரா, மேகலா, பொருளாதாரப் பிரிவு மண்டல தலைவர் சஜீவன் மற்றும் வார்டு பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை