உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விழுந்த மரம் அகற்றாததால் விபத்து அபாயம்

விழுந்த மரம் அகற்றாததால் விபத்து அபாயம்

குன்னுார் : குன்னுார்- கோத்தகிரி சாலை உபாசி அருகே, விழுந்த மரம் அகற்றப்படாததால் விபத்து அபாயம் உள்ளது.குன்னுாரில் பெய்த கன மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக சீரமைக்கப்பட்டது. எனினும், குன்னுார்- கோத்தகிரி செல்லும் சாலை உபாசி அருகே பைன் மரம் முறிந்து சாலையோரத்தில் விழுந்துள்ளது. இதன் கிளைகள் சாலையில் உள்ளதால், வளைவான இந்த பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. இதனை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பேரிடர் மீட்பு நடவடிக்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வருவாய் துறையினர் இது போன்று, சாலையோரத்தில் விழுந்து கிடக்கும் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை