மேலும் செய்திகள்
கட்டட கழிவால் பாதிப்பு
22-Dec-2025
சிறுத்தை உலா
22-Dec-2025
பந்தலுார்;பந்தலுார் வனப்பகுதியில் பாக்குதோல் எரிக்கப்படுவதால் காட்டுத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுார் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட, பந்தலுார் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் பாக்குகள் தோல் உரிக்கப்பட்டு கொட்டை பாக்குகளாக மாற்றும் பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். கழிவுகளாக மாறும் பாக்கு தோல்கள் சாலையோர வனப்பகுதிகள் மற்றும் வனத்தின் உட்பகுதிகளில் கொட்டி வருகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தண்ணீரும் மாசடைந்து வருகிறது. இதற்கிடையில் வனப்பகுதியில் கொட்டப்படும், பாக்கு தோல்களை எரிப்பதால், காட்டுத்தீ பரவி வனம் முழுவதும் பாதிக்கப்படுகிறது.அப்பகுதி மக்கள் கூறுகையில்,' கோடையில் வனப்பகுதிகளில் பாக்கின் தோல்களை கொட்டும் நபர்கள் மீதும், அதில் தீ வைக்கும் சமூக விரோதிகள் மீதும் வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
22-Dec-2025
22-Dec-2025