உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கலாசாரத்தை மேம்படுத்தும் ரஷ்ய நடனம்

கலாசாரத்தை மேம்படுத்தும் ரஷ்ய நடனம்

மேட்டுப்பாளையம் : கலாசாரத்தையும், நட்புறவையும் மேம்படுத்தும் வகையில், சோவியத் ரஷ்ய நடன கலைகள் அமைந்துள்ளன, என, இந்திய ரஷ்ய கலாசார நட்புறவு கழகத்தின் பொது செயலாளர் தங்கப்பன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அருகே உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், ரஷ்ய கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ரஷ்யாவில் கல்லூரியிலும் படிக்கும் மாணவிகள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நபர்கள், 16 பெண்கள், 3 ஆண்கள் என, 19 பேர் இந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.தமிழ் பாடல்கள் உள்பட, 19 பாடல்களுக்கு நடனங்கள் ஆடினர். இதில் ரஷ்ய நாட்டின் கலாசாரத்தையும், இந்திய நாட்டின் கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதுகுறித்து இந்திய ரஷ்ய கலாசார நட்புறவு கழகத்தின் பொதுச் செயலாளர் தங்கப்பன் கூறியதாவது: இந்திய ரஷ்ய வர்த்தக சபையுடன் இணைந்து, இந்திய ரஷ்ய கலாசார நட்புறவு கழகம், இந்தியாவில் ரஷ்ய நடன கலை நிகழ்ச்சிகளை கடந்த, 21 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில் மொழி வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நடனக்கலை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இதில் நட்புறவையும், கலாசாரத்தை வளர்க்கும் வகையில் நடனங்கள் இடம் பெறுகின்றன,' என்றார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை