உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: ஊட்டி நகரில் அவலம்

சாலைகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: ஊட்டி நகரில் அவலம்

ஊட்டி:பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் தேங்கி சாலைகளில் வழிந்தோடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இதில், 28 வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரும்பாலான வார்டுகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாயில் கழிவுகள் சிக்கி ஏற்படும் அடைப்பால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது, ஊட்டி அப்பர் பஜார் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் சாலையில் தேங்கி அப்பர் பஜாரிலிருந்து லோயர் பஜார் வரை நடைபாதை மற்றும் சாலைகளில் வழிந்தோடுகிறது. அதேபோல், ஊட்டி ஹாம்ஸ் ஹவுஸ் சாலையில் கடந்த ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிகர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என, மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், ஊட்டி நகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அடைப்பு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்து முழுமையாக சரிசெய்ய வேண்டும்.' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை