மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
11 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
11 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
11 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
11 hour(s) ago
அன்னுார்:ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், 'கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை' என்னும் தொடர் வகுப்பு கடந்த வாரம் துவங்கியது.இரண்டாவது வாரமாக நடந்த விழாவில், கோவை 'இஸ்கான்' அமைப்பின் துணைத் தலைவர் மது கோபால் தாஸ் பேசுகையில், ''பகவத் கீதையில் உள்ள சுலோகங்களை வாசிக்க வேண்டும். வீட்டில் தினமும் குறைந்தது ஒரு சுலோகம் வாசித்து பொருளையும் புரிந்து கொள்ள வேண்டும். பக்தி யோகத்தால், மனதில் வெறுப்பு, அகந்தை, ஆணவம், பொறாமை விலகும். பகவானை சரணடைய வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். கிருஷ்ண நாம உச்சாடனமே முக்திக்கு வழி. நாமத்தை உச்சரிக்கும் போது மனம் ஒருமைப்படும். தீய எண்ணங்கள் விலகும், என்றார்.'''ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை பகவத் கீதை சொற்பொழிவு நடைபெறும்,' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago