உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் கோவிலில் ஆடி பெருக்கு சிறப்பு பூஜை

பந்தலுார் கோவிலில் ஆடி பெருக்கு சிறப்பு பூஜை

பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திக்குன்னா ஆற்றங்கரை ஓரம் பெரியாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காலை முதல் கோவில் அர்ச்சகர் ரமேஷ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற தாலி கயிறு மாற்றும் பூஜை மற்றும் சிறப்பு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதி பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு பெற்று சென்றனர். * நெல்லியாளம் டான்டீ மாரியம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மன் மற்றும் காளியம்மனுக்கு காய்கறி மாலைகள் அணிவித்து பக்தர்கள் பூஜை செய்தனர். பூஜையில் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி