உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளிக்கு தனி பஸ் மாணவர்கள் மகிழ்ச்சி

அரசு பள்ளிக்கு தனி பஸ் மாணவர்கள் மகிழ்ச்சி

கூடலுார்;கூடலுார் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலை பள்ளியில், மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை துவக்கி வைத்து பேசினார்.தொடர்ந்து, 'மைக்ரோ லேண்ட் அறக்கட்டளை; யுனைடெட் வியூ' சார்பில், மாணவர்கள் பயன்பாட்டுக்காக இப்பள்ளிக்கு வழங்கப்பட்ட பஸ்சை, மாவட்ட கலெக்டர் பள்ளிக்கு வழங்கி, அதன் இயக்கத்தை துவக்கி வைத்தார். மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் கீதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்