| ADDED : ஜன 25, 2024 12:15 AM
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று தேரோட்டம் மற்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 18ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில், சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 7:30 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள், எம்.எல்.ஏ., க்கள், முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.குன்னத்தூர், பழனியாண்டவர் கோவிலில் இன்று காலை 9:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை, கோவிலில் காவடிகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.அ.குமாரபாளையத்தில் வட்டமலை ஆண்டவர் ஆலயத்தில் இன்று காலை அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மதியம் அலங்கார பூஜை நடக்கிறது. சுவாமி உட்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் சன்னதியில் மதியம் அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடக்கிறது சுவாமி உட்பிரகாரத்தில் உலா வரும் வைபவம் நடக்கிறது.அன்னுார் வட்டாரத்தில், பொகலூர், எல்லப்பாளையம், பொன்னே கவுண்டன்புதூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா நடைபெறுகிறது.