உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவனல்லா சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி

மாவனல்லா சாலையில் தற்காலிக சீரமைப்பு பணி

கூடலுார்;முதுமலை அருகே சேதமடைந்த மசினகுடி -மாவனல்லா சாலையில் தற்காலி பணிகள் நடந்து வருகிறது.மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக, ஊட்டி சாலை செல்கிறது. இச்சாலையில், மசினகுடி- மாவனல்லா இடைப்பட்ட சாலையோரம் சேதமடைந்து காணப்பட்டது. இச்சாலையில், உள்ளூர் ஓட்டுனர்களும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை இயக்கவும்; எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடுதல் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனால், விபத்து அபாயமும் ஏற்பட்டது. சேதமடைந்த சாலையோரங்களை சீரமைக்க ஓட்டுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கான நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்தனர்.இந்நிலையில், மசினகுடி, பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இச்சாலை மற்றும் மசினகுடி - பொக்காபுரம் சாலையோரங்களில் சேதமடைந்த மற்றும் தாழ்வான பகுதிகளில், ஜல்லி கற்களை கொட்டி, தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டனர்.இதனை வரவேற்றுள்ள ஓட்டுனர்கள், 'சேதம் அடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்