உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்தவர் மயக்கம்

பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு முகாமிற்கு வந்த பயனாளி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. தனியார் மண்டபத்தில் நடந்த முகாமில், அதிக அளவிலான மக்கள் பங்கேற்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, எருமாடு பகுதியை சேர்ந்த சூர்யா என்ற பெண், உடல் சோர்வடைந்து திடீர் மயக்கம் அடைந்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த, மருத்துவ குழுவினர் அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சை அளித்தனர். அதில், கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது தெரிய வந்தது. மருந்து கொடுத்த பின்னர் தெளிவடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை