மேலும் செய்திகள்
ரூ. 1.30 கோடிமதிப்பீட்டில் சாலை பணி
16 hour(s) ago
நீலகிரியில் 3,402 பேருக்கு மகளிர் உரிமை தொகை
16 hour(s) ago
மணியட்டி சாலையில் சிறுத்தை நடமாட்டம்
16 hour(s) ago
காவல்துறை வாகனங்கள் டி.ஐ.ஜி., ஆய்வு
16 hour(s) ago
ஊட்டி : கொரனூர் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்க எதிர்ப்பு தெரிவித்து, எப்பநாடு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த தூனேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட எப்பநாடு கிராமத்தில், 500 குடும்பங்கள் உள்ளன. அருகில் 1 கி.மீ., தொலைவில் கொரனூர் காலனியில், 40 குடும்பங்கள் உள்ளது. இதன் அருகே பிக்கப்பட்டிமந்து பகுதியில், 30 குடும்பங்கள் உள்ளன.கடந்த பல ஆண்டுகளாக ஊட்டியில் இருந்து எப்பநாடு கிராமம் வரை மட்டும் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எப்பநாட்டில் இருந்து கொரனுர் செல்லும் போது மாலை நேரத்தில் வனவிலங்கு தாக்குதல் இருப்பதால் கொரனூர் மற்றும் பிக்கப்பட்டிமந்து காலனிகளுக்கு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால், அப்பகுதி மக்கள் கொரனூர் வரை பஸ் இயக்க வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். கொரனூர் வரை பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.எப்பநாடு வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சை, கொரனூர் வரை இயக்க எப்பநாடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தனர். எப்ப நாடு கிராம மக்கள் பஸ்சை எப்பநாடு தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம் என, கூறி நேற்றிரவு வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago