உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மின்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

மின்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்

கோத்தகிரி: உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடம் மாற்றப்பட்டுள்ளது. கோத்தகிரி மின்துறை உதவி செயற்பொறியாளர் (நகரம்) மாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட, வெஸ்ட்புரூக் பிரிவு உதவி மின் பொறியாளர் அலுவலகம், அணையட்டி துணை மின் நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது. தற்போது, அந்த அலுவலகம் ஒரசோலை பஸ் நிறுத்தம் அருகில், கதவு எண்: 1446/4 A2 என்ற விலாசத்தில் நிரந்தரமாக, 1ம் தேதி முதல் இயங்குகிற து. எனவே, பெத்தளா, கல்லட்டி, பையங்கி, கூக்கல், மசக்கல், கூக்கல்தொரை, ஒரசோலை, தாந்தநாடு, காத்துகுளி, குமரன் காலனி, கேர்பன், ஆடா தொரை, பன்னீர், பெப்பேன், இருப்புக்கல், குண்டாடா, புடியங்கி, அரக்கம்பை, அத்திக்கம்பை மற்றும் வெஸ்ட்புரூக் பகுதி மக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த செய்தி குறிப்பில் அவர் கூறி யுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை