மேலும் செய்திகள்
கம்மாத்தியில் வயல் மற்றும் காரை சேதப்படுத்திய மக்னா
6 minutes ago
மசினகுடி ஆனைக்கட்டி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு
6 minutes ago
நுாலகமும்,- மதுவிலக்கும் விழிப்புணர்வு பேரணி
7 minutes ago
ஊட்டி: 'ஊட்டி மெயின் பஜார் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. த.வெ.க., நகர செயலாளர் ஜெயக்குமார் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: ஊட்டி, 22 வது வார்டு மெயின் பஜார் பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் இரண்டு இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. மது அருந்த வரும் மது பிரியர்கள் சாலையோரங்களில் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதும், சுகாதார சீர்கேடுகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மது பிரியர்களின் கலாட்டாவால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வியாபாரிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் , சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
6 minutes ago
6 minutes ago
7 minutes ago