உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விஷூ கனி காணும் நிகழ்ச்சி: மகிழ்ச்சியடைந்த மக்கள்

விஷூ கனி காணும் நிகழ்ச்சி: மகிழ்ச்சியடைந்த மக்கள்

பந்தலுார்; சித்திரை மாத முதல் நாளில், கேரளா மாநில மக்களால் விஷூ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் முதல் நாள் இரவில், ஒரு தட்டில் அரிசியை பரப்பி, அதில் நவதானியங்கள், பொன் நகைகள், புத்தகங்கள், தேங்காய்கள், கொன்றை மலர், வெள்ளரிக்காய், மாவடுகொத்து, தின்பண்டங்கள் பழ வகைகள் ஆகியவற்றை அடுக்கி பூஜை அறை மற்றும் கோவில் பிரகாரங்களில் வைத்து விடுவர்.தொடர்ந்து, சித்திரை மாத பிறப்பு அன்று அதிகாலை பொழுதில், விழி திறவாமல் முதல் நாள் வைத்த பொருட்களை பார்த்த பின்னர், பிற பொருட்களை பார்க்கும் வைபவம் நடந்து வருகிறது.முதல், வைக்கப்பட்ட சுபமான பொருட்கள் காண்பதால், வரும் ஆண்டில் ஆக்கப்பூர்வமான கனவுகள் நனவாகும் என்பதால் இதனை அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அதில், பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதியை சேர்ந்த இந்து சமுதாய மக்கள், இந்த முறையை பின்பற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.மேலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோல, ஊட்டி ஐயப்பன் கோவில், மாரியம்மன் கோவில், குன்னுார் அருவங்காடு ஐயப்பன் கோவிலில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். குன்னுார், வெலிங்டன் கோவில்களிலும் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பக்தர்களுக்கு கைநீட்டம் என அழைக்கும் நாணயங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை