உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  காரைக்கொல்லி பகுதி நீரோடையில் தண்ணீர் திருட்டு

 காரைக்கொல்லி பகுதி நீரோடையில் தண்ணீர் திருட்டு

பந்தலுார்: பந்தலுார் அருகே, காரைக்கொல்லி பகுதியில் பசுந்தேயிலை கொள்முதல் நிலையத்திற்கு, நீரோடை தண்ணீர் உறிஞ்சுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. பந்தலுார் அருகே காரைக்கொல்லி பகுதியில், சாலையை ஒட்டி நீரோடை செல்கிறது. இதனருகே, தனிநபர் ஒருவர் பசுந்தேயிலை, கொள்முதல் நிலையம் நடத்தி வருகிறார். இங்கு கொள்முதல் செய்யும் பசுந்தேயிலை, தொழிற்சாலைகளுக்கு, லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. பல மணி நேரம் லாரிகளில், பசுந்தேயிலை கொண்டு செல்லப்படுவதால், அவை வாடாமல் இருக்கும் வகையில், தண்ணீர் தெளித்து சாக்கு பைகளில் நிறைத்து, லாரிகளில் ஏற்றி மீண்டும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதற்காக பசுந்தேயிலை கொள்முதல் நிலையத்தை, ஒட்டிய நீரோடையில் இருந்து, தண்ணீர் திருடப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் சிறிய தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் இதன் கீழ் பகுதியில், தண்ணீர் வற்றி மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்படும். எனவே, இது குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவ சியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை