மேலும் செய்திகள்
தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்
12-Dec-2024
கூடலுார்; கூடலுார், மாக்மூலா பகுதியில் நுழைந்த காட்டு யானை பாக்கு மரங்களை, சேதப்படுத்தியது.கூடலுார் தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானை, இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினர், அதனை கண்காணித்து, விரட்டினாலும், அவைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாக்கமூலா பகுதியில் முகாமிட்ட காட்டு யானை, டேனியல் என்பவர் தோட்டத்தில் நுழைந்து ஏராளமான பாக்கு மரங்களை சாய்ந்து சேதப்படுத்தி, சென்றுள்ளது. இதுகுறித்து விவரம் நேற்று காலை தெரிய வந்தது.மக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை, இப்பகுதிக்கு நுழைவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். மேலும், காட்டு யானைகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வனத்துறை உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்,' என்றனர்.
12-Dec-2024