மேலும் செய்திகள்
நகரை ஒட்டிய பகுதியில் முகாமிடும் காட்டு யானை
16-Jul-2025
கூடலுார்; கூடலுார், குங்கூர்மூலா பகுதியில் வழி தவறி வந்த இரண்டு காட்டு யானைகளை, டிரோன் கேமரா உதவியுடன் வனத்துக்குள் விரட்டினர். கூடலுார், ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் இரவு நேரத்தில், இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டன. இவைகள் கொரவயல் வழியாக குங்கூர்மூலா குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. தகவல் அறிந்த அச்சமடைந்த மக்கள் பணிக்கு செல்லவில்லை. வனத்துறையினர், அவைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானை சாலை மற்றும் குடியிருப்புக்குள் நுழையும் ஆபத்து இருந்ததால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, டிரோன் கேமரா பயன்படுத்தி, அதிலிருந்து ஒலி எழுப்பி யானைகளை அம்பலமூலா வழியாக முதுமலை வனப்பகுதிக்கு விரட்டினர். மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில், இரவு நேரங்களில், காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு செல்கிறது. தற்போது பகல் நேரத்தில் ஊருக்குள் வர துவங்கி உள்ளது. இவைகளால் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத்துறையினர், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
16-Jul-2025