மேலும் செய்திகள்
கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வலியுறுத்தல்
30-Dec-2025
குன்னுார்: குன்னுார் வனப்பகுதிகளில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. குன்னுார் வனச்சரகத்திற்கு உட்பட்ட, 8 வன பிரிவுகளில், 7 பிரிவுகளில் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் தன்னார்வலர்களுடன் சேர்ந்து வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கி நடந்து வருகிறது. அதில், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம், கால் தடங்கள், உணவு எச்சங்கள், இடம் குறித்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. பர்லியார், பக்காசூரன் மலை பகுதிகளில், வனவர் ராஜ்குமார் மேற்பார்வையில், வன காப்பாளர்கள் நர்சோன் குட்டன், யேசுராஜ், நாகராஜ்; வண்டிச்சோலை பிரிவில், லேம்ஸ்ராக், சிம்ஸ் பார்க் பகுதிகளில், வனவர் முருகன் மேற்பார்வையில், வனகாப்பாளர்கள் ராம்குமார், ஞானசேகரன், சாதிக்; மேலுார் பிரிவில், உலிக்கல் பகுதிகளில் வனவர் ராமதாஸ் மேற்பார்வையில், வனக்காப்பாளர்கள் சுப்ரமணி, ரகுராம் பாண்டியன் உள்ளிட்டோர் பணியை மேற்கொண் டுள்ளனர்.
30-Dec-2025