மேலும் செய்திகள்
கார் விபத்தில் பெண் உயிரிழப்பு
28-Dec-2025
மழைக்கு ஒழுகும் வகுப்பறை பள்ளி மாணவர்கள் அவதி
02-Dec-2025
தப்பிய போக்சோ கைதி கேரளாவில் கைது
29-Nov-2025
பெரம்பலுார்: அரியலுார் அருகே, குடும்பப் பிரச்னையில் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.குருவாயூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்றுகொண்டிருந்த விரைவு ரயில், அரியலுார் அடுத்த மருதையாறு ரயில்வே பாலத்தை நேற்று முன்தினம் மாலை கடந்தபோது, சுமார் 20 வயது மதிக்கதக்க இளம் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பெண், பெரம்பலுார் மாவட்டம், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் மகள் சினேகா என்பதும், குடும்பப் பிரச்னையில் அவர் தற்கொலை செய்துக் கொண்டந்ததும் தெரியவந்தது. இருப்பினும், போலீசார் சினேகாவின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
28-Dec-2025
02-Dec-2025
29-Nov-2025