மேலும் செய்திகள்
தப்பிய போக்சோ கைதி கேரளாவில் கைது
29-Nov-2025
கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் சஸ்பெண்ட்
25-Nov-2025
இன்ஸ்பெக்டர் மரணம் பணிச்சுமை காரணமா?
19-Nov-2025
பாதை யில் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுப்பு
18-Nov-2025
பெரம்பலுார்:உழவர் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின், 99வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தினர், நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின், சங்க மாநில செயலர் ராஜா சிதம்பரம் தலைமையில், 'சின்ன வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடையை மத்திய அரசு நீக்க வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.தலையில் சின்ன வெங்காயத்தை கோர்த்து, முக்காடாக போட்டும், மாலையாக அணிந்தும் விவசாயிகள் நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், சின்ன வெங்காயம் கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, மத்திய அரசின் நுகர்வோர் நலத்துறை வாயிலாக, மத்திய அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
29-Nov-2025
25-Nov-2025
19-Nov-2025
18-Nov-2025