மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை மாவட்டத்தில் சுய தொழில் துவங்க முன்வருபவர்களுக்கு அரசிடமிருந்து மானியம், வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் தயாராக உள்ளது' என மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: படித்து வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் என்றால் ஐந்துலட்ச ரூபாயும், சேவைத் தொழில் என்றால் மூன்றுலட்ச ரூபாயும், வியாபாரம் என்றால் ஒருலட்ச ரூபாயும் வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்படும்.இதற்கு திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 15 சதவீதம் அரசு மானியமாக வழங்கும். தொழில் முனைவோர் 10 சதவீத தொகை முதலீடு செய்யவேண்டும். மீதமுள்ள 75 சதவீத தொகை வங்கிகள் மூலம் கடனுவி பெற்றுத்தரப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் 18 வயதுக்கு மேல் 35 வயதுகுட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருத்தல்வேண்டும். அரசு மானியத்துடன் கூடிய பிற கடனுதவிகள் பெற்றவராக இருத்தல் கூடாது. இதனடிப்படையில் சுயதொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்புகொள்ளலாம்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025