உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 இடத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 15 இடத்தில் ஓட்டு எண்ணிக்கை மையம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நகர்ப்புற பகுதிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஊரகப்பகுதிகளில் ஓட்டு சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளன.தேர்தல் முடிந்தபின் இவை பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு எடுத்துவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இதற்காக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு பி.எட். கல்லூரிகளில் மூன்று ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதுபோன்று இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி அரசு மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையங்களிலும் ஓட்டுச் சீட்டுகள் அடங்கிய மூடி முத்திரையிடப்பட்ட ஓட்டு பெட்டிகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு என தனி பாதுகாப்பு அறைகள், ஓட்டு சீட்டுகளை பிரிப்பதற்கான அறை மற்றும் ஓட்டு எண்ணும் அறை என தனித்தனியே அறைகள் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ