மேலும் செய்திகள்
தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்
27-Nov-2025
குவாரி விதிமீறல் வழக்கு
19-Nov-2025
மினி லாரி மோதி தம்பதி உயிரிழப்பு
11-Nov-2025
கொத்தமங்கலம்: புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் ஊராட்சியில், எல்.இ.டி., தெரு விளக்குகளை பொருத்துவதற்கான, 800-க்கும் மேற்பட்ட, 'எல்' வடிவ வளைவு இரும்பு குழாய்களை திருடி, பழைய இரும்பு கடையில் விற்பனை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா தலைமையில் அலுவலர்கள் அந்த இரும்பு கடையில் ஆய்வு செய்தனர். அப்போது, திருடு போனதாக கூறப்பட்ட குழாய்கள் இருந்தன. அவை, மீட்கப்பட்டு, ஊராட்சி அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன. 'பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், பழைய இரும்பு கடையில் அந்த இரும்பு குழாய்கள் வைக்கப்பட்டிருந்தன' என, இரும்பு கடைக்காரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
27-Nov-2025
19-Nov-2025
11-Nov-2025