உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முற்றுகை

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகில் நிலம் கையகப்படுத்துவதை ரத்து செய்யக் கோரி தாசில்தார் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவகம் உள்ளது. நினைவகம் அருகில் அறிவுசார் கட்டடம், பார்க்கிங் அமைக்க நிலம் வழங்க வேண்டும் என டி.ஆர்.டி.ஓ., எனும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வலியுறுத்தியது.இதையடுத்து தமிழக அரசும் நிலம் ஒதுக்கியது. இந்நிலையில் பேக்கரும்பு கிராமத்திற்கு சொந்தமான நிலத்தை டி.ஆர். டி. ஓ., அமைப்பு கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.டி.ஆர்.ஓ., கோவிந்தராஜுலு நிலம் கையகப்படுத்தப்படாது என உறுதியளித்த பின் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ