உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி

ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ரோட்டோரத்தில் கேட்பாரற்று கிடந்த 1275 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.தொண்டி பகுதி ரேஷன் கடைகளில் நேற்று திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், அலுவலர் அமுதன் ஆகியோர் ஆய்வு நடத்த சென்றனர். தொண்டி தெற்கு தெரு ரோட்டோரத்தில் அரிசி மூடைகள் கிடந்தன. அவற்றை ஆய்வு செய்த போது 35 கிலோ கொண்ட 25 மூடைகள், 50 கிலோ கொண்ட 8 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. 1275 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய அலுவலர்கள் அருகில் நின்றவர்களிடம் விசாரித்தனர். வெளியூரைச் சேர்ந்த மர்மநபர்கள் அவற்றை வாங்கி வைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரிந்தது. பின் அரிசி மூடைகளை திருவாடானை நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை