உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

டூவீலரில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

திருவாடானை: திருவாடானை அருகே கடம்பாகுடியில் டூவீலரில் கடத்திய 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.திருவாடானை எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கடம்பாகுடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சா மற்றும் நான்கு கிலோ, டூவீலரை பறிமுதல் செய்தனர். பண்ணவயல் திலக் 19, திருவாடானை அஜித்குமார் 21, சிநேகவல்லிபுரம் தேவா 20 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி