உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய 4 பேர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய 4 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பிருந்தாவன் கார்டன் முதல்தெருவில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி பிருந்தாவன் கார்டன் முதல் தெருவைச் சேர்ந்த சகாதேவன் 54. இவர் அரசு போக்குவரத்துக்கழக நகர் கிளை பணிமனையில் தொழில் நுட்ப பிரிவு அலுவலராக பணிபுரிகிறார். ஜூலை 18ல் இவர் மண்டபத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மதியம் 1:20 மணிக்கு வருகை தந்த போது வீட்டின் இரும்பு கேட்டு உடைக்கப்பட்டும், மரக்கதவினை உடைத்து, இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த 120 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கேணிக்கரை எஸ்.ஐ., தினேஷ்பாபு விசாரித்தார். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த சாத்தையா 36. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை புத்தன்தருவையை சேர்ந்த பால்சாமி 43, துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் உள்ள ஏரலை சேர்ந்தவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகேயுள்ள ஜமுனா மரத்துாரில் வசிக்கும் ரவி 46, தேவகோட்டை சருகணி ரோடு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது காசிம் 43, ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது. மேற்கண்ட 4பேரையும் கேணிக்கரை போலீசார் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ