உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் குறைதீர் முகாமில் 502 மனுக்கள் ஒரு மாதத்தில் தீர்வு: கலெக்டர் உத்தரவு

மக்கள் குறைதீர் முகாமில் 502 மனுக்கள் ஒரு மாதத்தில் தீர்வு: கலெக்டர் உத்தரவு

ராமநாதபுரம் : மக்கள் குறைதீர்க்கும் முகாமில் நேற்று பெறப்பட்ட 502 மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார்.ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட 502 மனுக்கள் மக்களிடம் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். முன்னதாக ஹாக்கி இந்தியா சார்பில் தென்னிந்திய அளவிலான இரண்டாவது ஜூனியர், சப் ஜூனிர் பிரிவில் தமிழக அணிக்காக செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றனர். அவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். உதவி கலெக்டர் (பயிற்சி) மொகத் இர்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் தனலட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை