உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பீமன் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்

பீமன் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலம்

திருவாடானை : திருவாடானை திரவுபதி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 22 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பீமன் வேடமிட்டு வீதி உலா நடந்தது. பீமன் மகாபாரதத்தில் பெரும் பலசாலியாக இருந்தார்.பீமன் வேடமிட்டு வரும் பக்தரை வீடுகளில் உள்ளவர்கள் குடும்பத்துடன் வரவேற்பார்கள். அவருக்கு பொறிகடலை, வெல்லத்துடன் கூடிய பச்சரிசி, பால், பழம் கொடுத்து உபசரிப்பார்கள். பீமனை வரவேற்பதால் வீட்டில் தீய சக்திகள் இருக்காது, நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. நேற்று நடந்த விழாவில் பீமனை அனைத்து வீடுகளிலும் வரவேற்று உபசரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ