| ADDED : ஜூன் 14, 2024 10:23 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எருதுகட்டு விழாவை பழைய முறைப்படியே நடத்த வேண்டும் என பால்கரை கிராம மக்கள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி., கோட்டாட்சியர் அலுவலகத்தில் பால்கரை கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். அதில், பொக்கனாரேந்தல் அய்யனார் கோயில் எருதுகட்டு விழா 58 ஆண்டுகளாக நடக்கிறது. பால்கரை, பள்ளப்பச்சேரி, முத்துவீரப்பன் வலசை, பொக்கனாரேந்தல் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்கள் ஒருங்கிணைந்து எருது கட்டு விழா நடக்கிறது.அப்போது எல்லோரும் முன்மொழிந்து முதலாவதாக பால்கரை மாடு மேளதாளத்துடன் அவிழ்த்து விடப்படும்.வரும் ஜூன் 19 ல் திருவிழாவின் போது வேறு கிராம மாட்டை முதலில் விடுவதற்கு ஏற்பாடு நடக்கிறது. அவ்வாறு இல்லாமல் பழைய வழக்கப்படி பால்கரை கிராம மாட்டை முதலாவது விழாவில் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.