உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆடிப்பூரம்: கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கும் விழா

ஆடிப்பூரம்: கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவிக்கும் விழா

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்னர் வீல் கிளப் ஆப் ராம்நாடு சார்பில் 50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடந்தது.இந்த விழா 15 ஆண்டுகளாக இன்னர் வீல் கிளப் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து டாக்டர் மதுரம் பேசினார். கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், குழந்தை பிறப்புக்குப்பின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்கினார். முன்னாள் தலைவி கவிதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கருவுற்ற மகளிருக்கு ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனைகள் செய்யப்பட்டது. சத்துணவு, மன நலம் குறித்து டாக்டர் ரம்யா பேசினார். செயலாளர் அனுப்பிரியா, பொருளாளர் டாக்டர் கனகப்பிரியா மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்