மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
வாலிநோக்கம்: வாலிநோக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேதமடைந்திருந்தது. தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு பராமரிப்பு பணிகள் நடந்தது. இந்நிலையில் இதன் அருகே 2021ல் ரூ.25 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகள் பிரிவு கட்டடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. வாலிநோக்கத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது: வாலிநோக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் அவசர தேவைகளுக்காகவும் முதலுதவி சிகிச்சை பெறவும், கர்ப்பிணிகள் பரிசோதனை உள்ளிட்ட தேவைகளுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் பணிகள் முடிவுற்ற நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இங்கு அவசர தேவைகளுக்கான சிகிச்சை பெறுவதற்கு சாயல்குடி, கீழக்கரை, ராமநாதபுரம் செல்ல வேண்டி உள்ளது. 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என போர்டு மட்டுமே உள்ளது. ஆனால் முழு நேர நிலைய டாக்டர் இல்லை.வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே வெளியில் இருந்து டாக்டர் வந்து செல்கிறார். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago