மேலும் செய்திகள்
பா.ஜ., கட்சியின் 2வது பூத் கமிட்டி ஆலோசனை
1 hour(s) ago
அக்.11ல் ரேஷன் குறை தீர் முகாம்
1 hour(s) ago
நாளை (அக்.9) மின்தடை
1 hour(s) ago
பல மாதங்களாக வராத குடிநீர்: மக்கள் அவதி
1 hour(s) ago
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்கள நாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆனி திருமஞ்ன விழா நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது.இங்கு ஆண்டிற்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்றது. அன்றைய தினம் பச்சை மரகத நடராஜர் திருமேனியில் ஆண்டிற்கு ஒருமுறை சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கும். இந்த அரிய நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.அடுத்து ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடக்கும் சிறப்பு அபிஷேகம் ஆனி திருமஞ்சனம் என அழைக்கப்படுகிறது. உற்ஸவ மூர்த்திகளான நடராஜப் பெருமான் சமேத சிவகாமி அம்மன் மரகத நடராஜர் சன்னதி முன்பு மேடை அமைக்கப்பட்டு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், தீப, துாப நெய்வேத்தியங்களும் படைக்கப்பட்டது.இந்த பூஜை அதிகாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடந்தது. ஓதுவார் மூலம் திருவாசகம் திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டன. உள்பிரகார வீதி உலாவிற்கு பிறகு மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் உற்ஸவமூர்த்திகள் கொண்டு செல்லப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.கயிலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago