உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா நிறைவு

அந்தோணியார் சர்ச் தேர் திருவிழா நிறைவு

கமுதி, : கமுதி அந்தோணியார் சர்ச் தேர்த் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.கமுதி மெயின் பஜாரில் அந்தோணியார் சர்ச் 300 ஆண்டுகள் பழமையானது. இங்கு தேர் திருவிழாவை முன்னிட்டு ஜூன் 3ல் கொடியேற்றம் நடந்தது. தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக திருப்பலி முடிந்து அந்தோணியார், ஜெபஸ்தியார், சவேரியார், மிக்கேல் சம்மனசு ஆண்டவர் தேர்பவனி மின்னொளி அலங்காரத்தில் நடந்தது.சர்ச்சில் இருந்து கிறிஸ்தவர் தெரு உட்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. பின் கர்த்தர் நினைவு திருப்பலி அசனம் நடந்தது. நிறைவாக கொடியிறக்கத்துடன் விழா முடிந்தது. காணிக்கையாக வழங்கப்பட்ட ஆடுகளை பலியிட்டு மதம் சமூக ஒற்றுமையுடன் அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் கமுதி, சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரத உறவின் முறையார், விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி