| ADDED : ஜூன் 13, 2024 05:33 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் மகளிர் விடுதிகளை சமூகநலத்துறையின் மூலம் https://tnswp.comஎன்ற இணையதள முகவரியில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்லுாரிகள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய வேண்டும்.இதுபோல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் மற்றும் தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.எனவே உரிய ஆவணங்களுடன் https://tnswp.comஎன்ற இணையதள முகவரியில் ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04567 -230 466 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.