மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் கைது
3 hour(s) ago
கண்மாயில் சிக்கிய வாலிபர் மீட்பு
3 hour(s) ago
வியாபாரிகள் கோரிக்கை
4 hour(s) ago
விழிப்புணர்வு முகாம்
4 hour(s) ago
விலையில்லா சைக்கிள் வழங்கல்
4 hour(s) ago
ராமநாதபுரம்:சிவகங்கை மாவட் டம் கீழடி அகழாய்வு மையத் திற்கு வழங்கப்படும் முக்கியத் துவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் அக ழாய்வுக்கு அரசு கொடுக்காதது ஏன் என தொல்லியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.அழகன்குளம் பகுதி யில் முதல் கட்டமாக 1986ல் அகழாய்வு நடத்தப் பட்டது. அழகன்குளம் வைகை ஆற்றின் முகத்துவாரப்பகுதிக்கு அருகாமையில் உள்ளது. இங்கு பழைய துறைமுகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப் பட்டுள்ளன. கீழடியை விட அதிகமான பொருட்கள் அழகன்குளம் அகழாய்வின் போது கிடைத்துள்ளன. இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தொல்லியல் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தப்படும் என அ.தி.மு.க., அரசில் அமைச்சராக இருந்த பாண்டியராஜன் அறிவித்தார். கடந்த 2020 ல் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் அரசால் வழங்கப்பட்டது. இன்றுவரை அழகன் குளத்தில் 8 கட்டங்களாக அகழாய்வு பணிகளை தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. இதுவரை அழகன்குளத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் குறித்த எந்த தகவலும் இல்லை. உடனடியாக அழகன்குளத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைத்து இங்கு எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும். அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் ஆய்வு அறிக்கையை வெளியிட தமிழக அரசு முன் வர வேண்டும் என தொல்லியல் ஆர்வலரான வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago